india

img

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார்... விசாரணையில் மத்திய அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? உத்தவ் தாக்கரே கேள்வி....

மும்பை:
இந்தியா மற்றும் ஆசியாவின் முதற்பெரும்பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி.மும்பையிலுள்ள இவரது மாளிகையின் அருகே, கடந்த பிப்ரவரி 25 அன்று வெடிகுண்டுகள் நிறைந்த எஸ்யுவி கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. காரின் உரிமையாளர்என்று கூறப்பட்ட ஹிரேன் மன்சுக் (45) என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், ஹிரேன்மன்சுக்கின் உடல், உயிரிழந்த நிலையில் மும்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. இதையடுத்து, மும்பை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.இதனிடையே, இந்த வழக்கை தேசியபுலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தத் துவங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அதிகாரிகளுக்கே இந்தவழக்கை விசாரணை செய்யக் கூடிய திறமைஇருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தும், அதைக் கேட்பதாக இல்லை.

இதையடுத்து, மத்திய அரசு இந்த வழக்குவிசாரணையில் தீவிர ஆர்வம் காட்டுவதைப் பார்த்தால், இதில், ஏதோ தவறாக உள்ளதைப் போல தெரிவதாக மகாராஷ்டிர முதல்வர்உத்தவ் தாக்கரே சந்தேகம் எழுப்பியுள்ளார்.“மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வருவது அனைவருக்கும் தெரியும். விசாரணை முகமைகள் யாருக்கும் சொந்தமானது இல்லை. அரசுகள் மாறலாம், ஆனால் அமைப்புகள் மாறாது. அமைப்பை அனைவரும் நம்ப வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்த வழக்கிற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுவதைப் பார்த்தால் இதில் எதோ தவறாக உள்ளது” என்று கூறியுள்ளார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மும்பையிலுள்ள ஹோட்டல் விடுதியொன்றில் தாத்ரா- நாகர் ஹவேலி தொகுதி சுயேச்சை எம்.பி.மோகன் டெல்கரின் உடல் இறந்த நிலையில்கண்டெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையையும் நினைவுபடுத்தியுள்ள தாக்கரே, “அந்த வழக்கையும் நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். ஏனென்றால் யூனியன் பிரதேசத்தில் யார் அனைத்தையும் கட்டுப் படுத்துவது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

;