tamilnadu

img

தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது சரியல்ல... நிறுவனங்களுக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

மும்பை:
தொழில் நடவடிக்கைகள் துவங்கும் நிலையில், நிறுவனங்கள் தனது தொழிலாளர் களை பணி நீக்கம் செய்வது சரியல்ல! என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.மண்ணின் மைந்தர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு பெறுவதற் காக மாநில அரசு சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள ‘மகாஜாப்ஸ்’ என்ற வலைதளத்தைஉத்தவ் தாக்கரே, திங்களன்றுதுவங்கி வைத்தார். அப்போதுஅவர் பேசியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் தொழிற் துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்ததை அடுத்து,சொந்த ஊருக்குச் சென்றிருந்த புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர்.இன்று நமக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால்தொழிலாளர்கள் இல்லை. இதுதான் உண்மை நிலை.இதனிடையே பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக் கான சம்பளத்தை குறைப்பதையும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதையும் பார்க்கிறேன்.மகாராஷ்டிர தொழிலாளர்களும் ஊரடங்கின் போதும்சொந்த ஊர் திரும்பாத புலம் பெயர் தொழிலாளர்களும், தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தனர். இது சரியல்ல.தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் சிரமங்களை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. எனவே இந்த பிரச்சனை குறித்து தொழில் அதிபர்களுடன் விவாதிக்கப்படும்.இவ்வாறு உத்தவ் தாக் கரே கூறியுள்ளார்.

;