india

img

நாடாளுமன்றக் குழுக்களிலிருந்து பாஜக கூட்டணி எம்.பி. ராஜினாமா.... மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு....

புதுதில்லி:
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஒன்றேகால் கோடி விவசாயிகள் திரண்டு தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுள்ளனர். இந்தப் போராட்டம் நாளுக்குநாள் தீவிர
மடைந்து வருகிறது.எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும்கூட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்ட போதே, அதை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிரோமணி அகாலிதளம் கட்சிதனது மத்திய அமைச்சரை திரும்பப் பெற்றுக் கொண்டது. பின் னர் பாஜக கூட்டணியிலிருந்தும் வெளியேறியது.

தேபோல, ஹரியானாவில் பாஜக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி, விவசாயிகளுக்காக தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது. துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அந்த கட்சியின் தலைவர்துஷ்யந்த் சவுதாலா அண்மையில் அறிவித்தார்.இந்நிலையில்தான், ராஜஸ் தானில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியும், பாஜக-வுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.ராஷ்ட்ரிய லோக் தந்திரிக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் தொகுதி எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால், தான் நாடாளுமன்றக்குழுவில் வகித்துவந்த மூன்று உறுப்பினர் பதவிகளை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை பெனிவால் அனுப்பி வைத்துள்ளார்.“நான் உறுப்பினராக இருந்த நாடாளுமன்றக் குழுக்களில் மக்கள் பிரச்சனைகள் பற்றி எவ்வளவு குரல் எழுப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.இவ்வாறு செயலற்ற நாடாளுமன்ற குழுக்களில் நான் இருப்பதுநியாயமில்லை. பிரச்சனைகளுக்கு செவி சாய்க்கப்படாததாலும், விவசாயிகள் போராட்டத்தாலும், நாடாளுமன்ற குழுக்களில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

;