india

img

ஜனாதிபதியிடம் முறையீடு... வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை.... எதிர்க்கட்சித் தலைவர்கள்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான  வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் மனு அளித்து வலியுறுத்தினர்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தில்லியை முற்றுகை யிட்டும் நாடு முழுவதும் விவசாயிகள்  தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற  வேண்டும் என்று  டிசம்பர் 9 புதனன்று எதிர்க் கட்சி தலைவர்கள் 5 பேர் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

 சந்திப்புக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவதுமிகவும் முக்கியமானது என்று குடியரசுத்தலைவரிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால் எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்தனர்.ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுகுடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி னோம்.  20-க்கும் மேற்பட்ட கட்சிகள்சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனுஅளித்துள்ளோம். விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந் தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்? வேளாண்சட்டத்தால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பு இல்லை, இந்த வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.

;