india

img

அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவும்.... யெச்சூரியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில்

புதுதில்லி:
அஞ்சல் மூலம் வாக்களித்திட அனுமதிப்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுப்பியிருந்த சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் சில மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில்வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தது. இதன்மீது சீத்தாராம் யெச்சூரி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இதற்கு டிசம்பர் 19 அன்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் என்.டி. புட்டியா, சீத்தாராம்யெச்சூரிக்குப் பதில் அனுப்பியிருக் கிறார். அதில், மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்காக, சிறப்புஷரத்துக்கள் 2011இல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் ஆயினும்தற்போதுள்ள விதிகளின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டிற்குவந்து நேரில்தான் வாக்களிக்க முடியும் என்றும், ஆயினும் அனைத்துத்தரப்பினருடனும் அரசியல் கட்சிகளுடனும் கலந்துபேசி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், அஞ்சல் வாக்குகள் மூலமாகவோ அல்லது பதிலி ஆட்கள் மூலமாகவோ வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், 1961 தேர்தல் நடத்தை விதிகளில், மின்னணு மூலம் அஞ்சல் வாக்கு முறை (ETPBS-Electronically Transmitted Postal Ballot System) ஏற்படுத்திட, திருத்தம் செய்யப்பட்டது என்றும், அதன்படி ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் மத்தியஅரசின் ஊழியர்கள் வாக்களித்தார்கள் என்றும், இந்த முறை வெற்றிகரமாக அமல்படுத்தப் பட்டதால், இதனை வெளிநாடு வாழ்இந்தியர்களுக்கும் நீட்டித்திடலாம் என  தேர்தல் ஆணையம் கருதுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சீத்தாராம் யெச்சூரி தன்னுடைய கடிதத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கவேண்டும் என்பதற்கு ஆதர வாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாகக் குறிப்பிட்டிருந் தார். எனவேதான் மின்னணு மூலம்அஞ்சல் வாக்கு முறையை வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கும் நீட்டித்திடலாம் என்று தேர்தல் ஆணையம் முன்மொழிந்திருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். (ந.நி.)

;