india

img

ஆப்கனிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்.... அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு வெளியுறவு அமைச்சர் தகவல்....

புதுதில்லி:
ஆப்கனிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர்டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாதி கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாட்டை விட்டு வெளியேற மக்கள்காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகின்றனர். ஆப்கனில் சிக்கியுள்ள பல்வேறுநாட்டு மக்களை அந்தந்த நாடுகள்
விமானம் மூலம் அழைத்து வருகின்ற னர். முன்னரே திட்டமிடாத ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்துவருகிறது. 

இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது,அங்குள்ள இந்தியர்கள் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஆகஸ்ட் 26 வியாழனன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டிஆர் பாலு, சிபிஎம் தலைவர் எளமரம் கரீம், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், அப்னா தளம் கட்சி சார்பில் அனுப் பிரியா, தேவகவுடா உள்ளிட்ட 31 நாடாளுமன்றக் கட்சிகளின் 37 தலைவர்கள் பங்கேற்றனர். ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம்  கூறுகையில் “ஆப்கனிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் முழுமையாக விரைவில் வெளியேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது சர்வதேச அளவில் முடிவு
கள் ஏதும் எடுக்கப்பட்டால், அதில்இந்தியாவின் பங்கு அங்கீகரி்க்கப் படும். அடுத்துவரும் நாட்களில் இதுபோன்று பல கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலவரம் தெரிவிக்கப்படும். ஆப்ரேஷன் தேவி சக்தி மூலம் 6 விமானங்கள்ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இந்தியர்களை அழைத்துவிட்டோம், சிலருக்கு விமானம் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரையும் தாயகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர முயற்சிப்போம். ஆப்கன் மக்கள் சிலரையும் மீட்டுள்ளோம். இதுதொடர்பாக அனைத்து தகவல்களும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விரிவாக தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

;