india

img

நாட்டில் முறையான கல்வி பெறாதவர்கள் 15 கோடி பேர்.... தர்மேந்திர பிரதான் தகவல்...

புதுதில்லி:
நாட்டில் சுமார் 15 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முறையான கல்வி பெறாமல் உள்ளனர். சுமார் 25 கோடி பேர் அடிப்படை எழுத்தறிவு நிலைக்கும் கீழே இருக்கின்றனர் என ஒன்றியஅரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.“நாட்டில் 3 முதல் 22 வயது வரை உடைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் 50 கோடி பேர் உள்ள நிலையில், அவர்களில் 35 கோடி பேர் மட்டுமே அரசு, தனியார் மற்றும் அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளிகள், அங்கன்வாடிகள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதாவது, இந்த வயதினரில் 15 கோடி பேர் முறைன கல்வி நடைமுறைக்கு வெளியே உள்ளனர். 

சுதந்திரத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 19 சதவிகிதம் பேர் எழுத்தறிவு பெற்றிருந்தனர். இப்போது 75 ஆண்டுகளுக்குப் பின், அந்த எண்ணிக்கை 80 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. எனினும், 25 கோடி பேர் இன்னும் அடிப்படைஎழுத்தறிவு நிலைக்கு கீழ் உள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

;