india

img

மத்திய பாஜக அமைச்சரின் ரூ.900 கோடி கூட்டுறவு சங்க ஊழல்... ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 17 பேருக்கு நோட்டீஸ்

ஜெய்ப்பூர்:
கூட்டுறவு கடன் சங்க ஊழல் வழக்கில், மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட 17 பேருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு கடன் சங்கத்தில் (Sanjeevani Cooperation Credit Society) மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத், அவரது மனைவி மற்றும் 17 பேர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. சுமார் ரூ. 900 கோடி மக்கள்பணம் சூறையாடப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு அந்தப் பணத்தை மீட்டுத்தர வேண்டும், ஊழல் - முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று, சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்தவர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தைநாடினர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடைபெற்ற எஸ்ஓஜி (SOG) விசாரணையையும் அவர் கள் கேள்விக்கு உள்ளாக்கினர்.இந்த மனு, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் விஷ் னோய் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுசூதன் புரோஹித், “கூட்டுறவுச் சங்கத்தலைவர் விக்ரம் சிங், முன்னாள்உறுப்பினரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத்உள்ளிட்டோர் போலி ஆவணங்களைக் காட்டி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். எனவே, இந்தவழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகள் விசாரிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் பணம் வட்டி,அசலுடன் மீட்கப்பட வேண்டும்” என்று வாதங்களை எடுத்து வைத்தார். இதனைக் கேட்டுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, கூட்டுறவு சங்க ஊழல் முறைகேட்டுப் புகார்கள் தொடர்பாக, மத்திய பாஜகஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டு உள்ளது. இவ்வழக் கில் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

;