india

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணருங்கள்!

“தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்” என ஆளுநர்களின் தலைமையில் உச்சநீதிமன்றம் குட்டியுள்ளது.

“மாநில அரசுகள் நீதிமன்றங் களை அணுகிய பிறகே, ஆளுநர்  கள் மசோதாக்களின் மீது முடி வெடுப்பதேன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம்,  “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்  பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்  களை முடிவெடுக்க உத்தரவிடு மாறு நீதிமன்றங்களை அணுக வேண்  டிய கட்டாயத்தில் மாநில அரசுகள் தள்ளப்பட்டு இருக்கின்றன” என்  றும், “இந்தப் போக்கு நிறுத்தப்பட  வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள் ளது.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித்திற்கு எதிராக, அம் மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அர சின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்காமல் ஆளுநர் தாம திப்பதாகவும் மாநில சட்டப்பேர வையை கூட்டுவதற்கும் கூட ஆளு நர் முட்டுக் கட்டையாக இருப்பதாக வும் மனுவில் கூறியிருந்தது.

குறிப்பாக, கடந்த முறை பஞ்  சாப் சட்டப்பேரவை கூடியபோது,  நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்க ளுக்கு ஒப்புதல் தரவில்லை என்  றும், இவ்வாறு ஆளுநர் புரோ ஹித் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ள மசோதாக்களில் நிதி மசோதாவும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது. பஞ்சாப் மாநிலம் சார்பில் மூத்த  வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு  சிங்வி ஆஜராகி வாதாடினார். “மசோ தாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தி ருப்பது ஆட்சியை பாதித்துள்ளது” என்று அபிஷேக் மனு சிங்வி கூறி னார். சட்டப்பேரவையை கூட்டு வதற்கும் ஆளுநர் தடையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

அப்போது, ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குறிப் பிட்ட அந்த மசோதாக்கள் மீது  ஆளுநர் ‘பொருத்தமான முடிவு களை’ எடுத்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமைக்குள், இது தொடர்பான விவரங்களை தெரி விக்க ஆளுநர் உறுதி அளித்துள்ள தாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், “ஆளுநர் செயல்பட்டார் என்  றால், மாநில அரசு எதற்காக நீதி மன்றத்திற்கு வரப் போகிறது? பிரச்  சனை உச்சநீதிமன்றத்திற்கு வரும்  போதுதான் ஆளுநர்கள் செயல்படு வார்கள் என்றால், இந்தப் போக்கு  நிறுத்தப்பட வேண்டும்; நீங்கள்  (மாநிலங்கள்) உச்சநீதிமன்றத் திற்கு செல்லுங்கள், பிறகு ஆளுநர்  செயல்படத் தொடங்குவார் என் றால், அது கூடாது” என்று தலைமை  நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரி வித்தார். 

மேலும், “தாங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல  என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்று ஓங்கிக் குட்டு வைத்  தார்.

விசாரணையின் போது, மூத்த  வழக்கறிஞரும், முன்னாள் அட்  டர்னி ஜெனரலுமான கே.கே. வேணுகோபால், ஆளுநருக்கு எதி ராக கேரள அரசும், இதேபோன்ற  மனுவைத் தாக்கல் செய்திருப் பதை நினைவுபடுத்தினார்.

“மக்கள் நலனுக்காக நிறை வேற்றப்பட்ட மசோதாக்கள் மீது  ஆளுநர் நடவடிக்கை எடுப்ப தில்லை. மேலும் அரசு மனு தாக் கல் செய்வது குறித்து அறிக்கை வெளியான பிறகும் கூட, அதை நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறு கிறார்” என்பதையும் நீதிமன்றத்  தின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி னார்.

அப்போது, பஞ்சாப் வழக்கில், சொலிசிட்டர் ஜெனரல், நிலைமை குறித்து வெள்ளிக்கிழமைக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அன்றைய தினமே கேரள அரசின் மனுவையும், தமிழ்  நாடு அரசின் மனுவையும் விசாரிப்ப தாக தெரிவித்தார்.