india

img

காலத்தை வென்றவர்கள் : நேதாஜி பிறந்த நாள்....

நேதாஜி 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் பிறந்தார்.1938 குஜராத் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையில் “ஆங்கிலேய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை இங்குஅமல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக
உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதைஎதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதன்முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். 

வீட்டுச் சிறையில் பயங்கர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். அங்கு ஹிட்லரை சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். ஆயினும் இந்தியர்களைக் காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டதை எதிர்த்துப் பேசி அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித்தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்றுமொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார். ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது.  நேதாஜியால் 1942ல் இந்திய தேசிய ராணுவம் முறையாக உருவாக்கப்பட்டது. 1943 அக்டோபர் 21 அன்று ஆஸாத் ஹிந்த்-ன் ஒரு தற்காலிக ஆட்சியை அமைப்பதாக நேதாஜி அறிவித்தார். 

==பெரணமல்லூர் சேகரன்==

;