india

img

ஆராய்ச்சி மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரா? : கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி உயிர் தொழில்நுட்ப மையத்தின் இரண்டாவது வளாகத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் பெயரை சூட்டுவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு கேரள முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ஆர்.ஜி.சி.பி ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், அதனை அரசியல் பிளவுக்கு பயன்படுத்தக்கூடாது. ஆர்.ஜி.சி.பி ஆரம்பத்தில் மாநில அரசால் நடத்தப்பட்டது, இது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சர்வதேச தரத்தை அடையும் மையமாக வளர்க்கும் நோக்கத்துடன் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த வளாகத்துக்கு கோல்வால்கர் பெயருக்குப் பதிலாக சர்வதேச புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளின் பெயரை சூட்ட வேண்டும் என்று கேரள அரசு கருதுகிறது. இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுவே நிறுவனத்தின் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் மற்றும் பொது களத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்க உதவும். என்று தெரிவித்துள்ளார்.

;