india

img

நாளை முதல் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு

திருவனந்தபுரம், ஜன.12-

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றால் கடந்த மாா்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.  
அதனைத்தொடர்ந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சில மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் கேரளத்தில் திரையரங்குகள் மீண்டும் இயங்கவுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்து மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்படுவதால் மார்ச் மாதம் வரை கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்துள்ளது. மின்சாரக் கட்டணத்திலும் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
கேரள அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு திரைத்துறையினர் கேரளா முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

;