india

img

பழங்குடி மாணவர்களுக்கு முன்னுரிமை அனைத்து குழந்தைகளுக்கும் கேரளத்தில் டிஜிட்டல் கல்வி... பினராயி விஜயன் அறிவிப்பு...

திருவனந்தபுரம்:
“பழங்குடி சமூகத்திற்குமுன்னுரிமை அளித்துஅனைத்து குழந்தைகளுக் கும் டிஜிட்டல் கல்வி உறுதிசெய்யப்படும்” என்று முதல் வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல் கல்வியை உறுதி செய்வதற்கான பிரச்சாரம் தொடர்பாக கூட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் கள், மாவட்டப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மேயர் கள் கூட்டத்தில் முதல்வர் பேசினார். அப்போது அவர், “பழங்குடி சமூகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவைப்பட்டால், டிஜிட்டல் கற்றல் பொருட்களைக் கையாள பயிற்சிஅளிக்கப்படும். தேவைப் படும் கிராமங்களில் படிப்பு அறைகள் அமைக்கப்படும்.அனைத்து மாணவர் களுக்கும் டிஜிட்டல் கற்றல்கருவிகளின் தேவையை அரசாங்கம் உணர்ந்துள்ளது. எனவே, சிறிய ஆதரவோடு உபகரணங்களை வாங்கக் கூடியவர்கள் ஏற்கெனவே கூட்டுறவு வங்கிகளால் அறிவிக்கப்பட்ட வட்டி இல்லாதகடன் திட்டத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம்” என்றுபினராயி விஜயன் தெரிவித் துள்ளார்.

;