india

img

கோவா மக்களின் உயிர்காக்க உதவிய கேரள பொதுத்துறை நிறுவனம் கேஎம்எம்எல்....

கோவா:
கோவிட் நெருக்கடியைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள கோவாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் கேரளத்தின் நடவடிக்கை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கேரளம் 20,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜனை கோவாவுக்கு வழங்கியது. கேரள அரசின் முடிவுக்கு கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே நன்றி தெரிவித்திருந்தார்.

பொதுத் துறையில் தொடங்கப்பட்ட கேரளாவில் உள்ள ஆக்ஸிஜன் ஆலை நெருக்கடி காலங்களில் மனித வாழ்க்கையை நிலைநிறுத்த உதவியது. தி கேரளா மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ்லிமிடெட் (கேஎம்எம்எல்) என்ற பொதுத்துறை நிறு வனத்தால் ஆக்ஸிஜன் ஆலை  தொடங்கப்பட்டது. இந்த ஆலையை 2020 அக்டோபர் 10 ஆம் தேதி முதல்வர்  பினராயி விஜயன் திறந்து வைத்தார். ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த ஆலை தினசரி 70 டன் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உள்ளது. முன்னதாக, தொழில்துறை நோக்கங்களுக்காக ஆக்ஸிஜனை வாங்குவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.12 கோடி செலவிடப்பட்டது. ஆலை தொடங்கப்பட்டதன் மூலம், இந்த கூடுதல் செலவுகளை அரசாங்கத்தால் தவிர்க்கமுடிந்தது.இயற்கை எரிசக்தி திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த ஆலையின் செயல்பாடு மின்சார செலவையும் குறைக்கும். ஆலை வருகையால், கேரளா ஆக்ஸிஜனில் தன்னிறைவு பெறவும், டைட்டானியம் டை ஆக்சைடு முழுமையான உற்பத்தி
செய்யவும் முடியும். தொழில்துறை பயன்பாட்டிற்கு தற்போது 63 டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கூடுத லாக, ஏழு டன் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஆலைக்கு உள்ளது.

;