india

img

செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முதல் டோஸ் : அமைச்சர் தகவல்....

திருவனந்தபுரம்:
செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்படும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட டிரைவ்-த்ரூ தடுப்பூசி இயக்கம் வெற்றி பெற்றால் மேலும் பல மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

டிரைவ்-த்ரூ தடுப்பூசி மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது: தடுப்பூசியை 24 மணி நேர டிரைவ் இன் தடுப்பூசி மையம் மூலம்வாகனத்தில் இருந்தபடி செலுத்திக்கொள்ள லாம். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் தேவையான மருத்துவ உதவியும் வழங்கப்படுகிறது. இந்த இயக்கம் வெற்றி பெற்றால், அதிக மாவட்டங்களில் தொடங்க முடியும், என்றார்.செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும், 19 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம். ஒன்றிய சுகாதாரஅமைச்சருடனான கலந்துரையாடல் மிகவும்சாதகமானது. தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இந்த இலக்கை அடைய முடியும் என்றார்.குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அரசு தயாராக உள்ளது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்துவதன் மூலம் நோயாளிகளைக் கண்டறிய அரசு முயற்சிக்கிறது. அதனால்தான் டி.பி.ஆர். அதிகமாக உள்ளது. கேரளாவில், ஒவ்வொரு ஆறு பேரில் ஒன்று மட்டுமே நோய்கண்டறியப்படுகிறது, ஆனால் தேசிய அளவில்33 க்கு ஒன்று. கோவிட் நோய் தொற்று நிலுவையில் உள்ளது. இந்த ஓணம் பருவத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வாழ்க்கையும் வாழ்வாதாரமும் முக்கியம். “சுய பாதுகாப்பே மிகப்பெரிய விஷயம்” என்றுஅவர் கூறினார்.

;