india

img

மாநிலங்களின் கடன்கள் அதிகரிக்கின்றன... கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பேச்சு...

திருவனந்தபுரம்:
கேரளம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் கோவிட்டின் இரண்டாவது அலைக்கு செலவு செய்கின்றன. அதன் மூலம் கடன்கள் அதிகரிப்பது கேரளத்தில் மட்டுமல்ல. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்து வருகிறது. ஆனாலும், இரண்டாவது கோவிட் தொகுப்பு பொருளாதாரத்திற்கு பணம்கிடைக்கும் என்று கே.என்.பால கோபால் தெரிவித்தார்.

இதுகுறித்து கேரள சட்டப்பேரவை யில் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் மேலும் கூறியதாவது: 

குஜராத் 11.8 சதவிகிதமும், மகாராஷ்டிரா 10.3 சதவிகிதமும், பீகார் ஒன்பது சதவிகிதமும் சரிவைக் கண்டன.மொத்த கடன் உயர்கிறது. 2020 ஆம் ஆண்டில், பீகாரின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.1 சதவிகிதமாக இருந்தது, இப்போது 41.2 சதவிகிதமாக உள்ளது. உ.பி.யில் 30.5என்பது 40.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இது 33.4 லிருந்து 43.1 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தின் கடனும் 30 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. பஞ்சாபின் நிலைமை 46.3 சதவிகிதமாக மோசமான நிலையில் உள்ளது. முழு நாடும் ஒரு பெரியநிதி நெருக்கடியில் உள்ளது. இது நிர்வாக முறைகேடு காரணமாக இல்லை. இது ஒரு சிறப்பு நிகழ்வு. வழக்கமான வரவு-செலவு மற்றும் முன்னுரிமைகள் இப்போது சாத்தியமில்லை.

மாநிலங்களின் கடன் உச்சவரம்பை நான்கு சதவிகிதமாக அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனாலும், கூடுதல் கடன்கள் அனுமதிக்க நிபந்தனைகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.இரண்டாவது கோவிட் தொகுப்பு பொருளாதாரத்தில் பணத்தை கொண்டு வருவதற்கான திட்டத்தை நிதியமைச்சர்கே.என்.பாலகோபால் சட்டப்பேரவை யில் தெரிவித்தார். இது மக்களுக்கு அதிகபட்ச பணத்தை கொண்டு சேர்ப்பதற்கானதாகும் என்று அவர் கூறினார். சுகாதாரத் துறைக்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுநிதியின் ஒரு பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1500 கோடி பட்ஜெட்டின் ஒரு பகுதியாகும். ரூ .559 கோடி சுகாதாரத் துறைக்காக செலவிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கும், பொருள் விநியோகிப்பாளர்களுக்கும் பணம் கொடுப்பது சந்தைக்கு பணத்தை கொண்டு வருவதற்காகும். ரூ.1700 கோடி ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. நிலுவைத் தொகை இல்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படும். உணவு கிட் விநியோகத்திற்காக ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக பணத்தை கொடுப்பதற்கு சமம். நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள, ஓய்வூதியம் பெறாத தொழிலாளர்களுக்கு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்க ரூ.1100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கும் நிதி உள்ளது. குறைந்த பட்சம் ரூ.3,000 கோடி கூடுதல் தொகை ஊதியமாக கிராமப்புறங்களுக்கு கிடைக்கும். முதன்மை கூட்டுறவு வேளாண் கடன் சங்கங்களுக்கு ரூ.2000 கோடி கடன் வழங்குவது விவசாயத் துறைக்கு ஊக்கம் அளிக்கும்.

;