india

img

ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.18 கோடி 7 நாட்களில் அள்ளிக் கொடுத்தது கேரளம்...

கோழிக்கோடு:
முதுகெலும்பு தசைக் குறைபாடு  (ஸ்பைனல் மஸ்குலர் அட்றோபி) எனப்படும் மரபணு கோளாறுக்கு மருத்துவ உதவி கோரிய கண்ணூர் பழையங்காடியைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மருத்துவச் செலவுகளை கேரள மக்கள் ஏற்றுக்கொண்டனர். முஹம்மதுவின் சிகிச்சைக்கு தேவையான ரூ.18 கோடியை அவர்கள் வாரி வழங்கியுள்ளனர்.குழந்தைக்காக இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறுமளவுக்கு ஏழே நாட்களில் உதவிகள் வந்து குவிந்துள்ளது. முஹம்மதுவுக்கு கேரள சமூகம் செய்துள்ள உதவி சமூக ஊடகங்களின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும், மக்களின் உதவும் மனப்பான்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.

;