india

img

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பிரதமர் நேரில் ஆய்வு....

அகமதாபாத்:
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஜைடஸ் கெடிலா நிறுவனத்துக்கு நவம்பர் 28 சனிக்கிழமையன்று நேரில் சென்ற பிரதமர் மோடி, தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில்ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க்,புனேயில் உள்ள சீரம்  நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.இந்த மூன்று நிறுவனங்களில் கொரோனா தடுப்பு மருந்து 2-வது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் உள்ளன. அகமதாபாத் சாங்கோதர் தொழிற்பூங்காவில் உள்ளஜைடஸ் கெடிலா நிறுவனத்துக்கு சென்ற பிரதமர்மோடி, ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்டவிஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.2021 ஆம் ஆண்டு மார்ச்மாதம் கெடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கொரோனா வைரசுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடையபாராட்டுகள். இந்த மருந்துதயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

;