india

img

கும்பல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி ஆளில்லாத பகுதிக்கு சென்றது தவறு... கர்நாடக பாஜக அமைச்சர் ஞானேந்திரா சொல்கிறார்....

மைசூரு:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடக மாநிலம் மைசூரு-வின் சாமுண்டி மலைப் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில், பாதிக்கப்பட்ட அந்த மாணவி, மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு மேலாகியும், கர்நாடக காவல்துறை இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. சம்பவம் குறித்து விசாரிக்க “மாநில அரசு ஒரு குழுவை அமைக்கும்” என்று மட்டும்கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.இதனிடையே, கல்லூரி மாணவி ஆள் இல்லாத பகுதிக்கு சென்றதே வல்லுறவுக்குக் காரணம் என்பது போல பேசி, கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

“பாலியல் வன்கொடுமை தொலைதூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் அங்கு சென்றிருக்கக்கூடாது. அது ஒரு வெறிச் சோடிய இடம். மாலை நேரத்தில் அவர்அங்கு சென்றிருக்கக் கூடாது” என்று ஞானேந்திரா கூறியுள்ளார். மேலும், “இந்த விவகாரத்திற்காக என்னை ராஜினாமா செய்யச் சொல்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி, என்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயற்சிக்கிறது” என்றும் வாய்க் கொழுப்பாக பேசியுள்ளார்.அமைச்சரின் இந்தப் பேச்சு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சு பாதிக்கப்பட்ட மாணவி மீதே பழிபோடுவதாக உள்ளது என்றுகண்டனங்கள் எழுந்துள்ளன.

அமைச்சர் ஞானேந்திராவுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ்தலைவர் டி.கே. சிவகுமார், ‘பாலியல் வன்கொடுமை’ எனும் வார்த்தை அமைச்சருக்கு இயல்பானதாக இருக்கிறது. வேண்டுமானால், அமைச்சரை ‘பாலியல் வன்கொடுமை’ செய்தஅனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.கடந்த ஜூலை மாதம் கோவா மாநிலத்திலும் இதேபோல 14 வயதுச்சிறுமிகள் அரசு அதிகாரி உட்படநான்கு பேரால் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்போது கோவா மாநில பாஜக முதல்வரான பிரமோத் சாவத், “14 வயதுச் சிறுமிகள் எதற்காக இரவு முழுவதும் கடற்கரையில் தங்குகிறார்கள்?” என்று கேட்டிருந்தார். இதே கருத்தையே அரகா ஞானேந்திராவும் தற்போது வழிமொழிந்துள் ளார்.

;