india

img

கர்நாடகம்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 21 முதல் தொடக்கம்

கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இதனைதொடர்ந்து, கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மே 24 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூன் 21 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் என கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;