india

img

தைரியம் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.... இதற்கெல்லாம் மோடி அரசு பொறுப்பாக முடியாது....

பெங்களூரு:
மன தைரியம் இல்லாததாலேயே விவசாயிகள் தற்கொலைசெய்து கொள்வதாக- பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டில் பேசியுள்ளார்.

விவசாயிகள் தற்கொலையைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே வழக்கமாக வைத்திருப்பவர், பி.சி. பாட்டில். கடந்தடிசம்பர் 3-ஆம் தேதி குடகு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூட, “தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள், தன் குழந்தைகள், மனைவியைக் காப்பாற்ற முடியாத கோழை கள். தண்ணீரில் விழுந்தால் நாம்தான் நீச்சல் அடித்து கரையேறவேண்டும்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில்தான், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் பாட்டில் கொச்சைப் படுத்தியுள்ளார்.“மன உறுதியற்ற- பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். அதற்கெல்லாம் அரசைக் குறை கூறமுடியாது. அந்த மரணங்களுக் கெல்லாம் அரசை விமர்சிக்க முடியாது” என்று மைசூருவில் பேசியுள்ளார்.“விவசாயிகள் மட்டுமா. தற்கொலை செய்து கொள்கிறார்கள்? தொழிலதிபர்களும்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். அனைத்துத் தற்கொலைகளையும் விவசாயிகள் தற்கொலை என்று வர்ணிக்க முடியுமா?” என்று கிண்டலடித்துள்ள அவர், “விவசாயிகளின் தற்கொலைமுடிவுக்கு, அரசு வகுக்கும் கொள்கைகள் காரணம் கிடையாது” என்று கூறியுள்ளார்.

;