india

img

உ.பி. பல்கலை. பாடத்திட்டத்தில் ஆதித்யநாத், ராம்தேவ் புத்தகங்கள்..... உயர் இலக்கிய கருத்துக்கள் அடங்கியுள்ளதாம்...

லக்னோ:
முதல்வர் ஆதித்யநாத், கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்களை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்க, உ.பி. பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக தத்துவப் பாடப்பிரிவில் ஏற்கெனவே முதல்வர் ஆதித்யநாத் மற்றும் ராம்தேவின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் குழுவின் பரிந்துரை அடிப்படையில், உ.பி. மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் முதல்வர் ஆதித்யநாத்தின் ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் பாபாராம்தேவின் ‘யோக் சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா’ ஆகிய புத்தகங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி இளங்கலை தத்துவம் படிக்கும்மாணவர்கள் இனிமேல் தங்களின் இரண்டாவது செமஸ்டரில் ஆதித்யநாத், ராம்தேவின்புத்தகங்களை படித்து தேர்வெழுத வேண்டும். இதுகுறித்து சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டி.என். சிங் அளித்துள்ள பேட்டியில், ‘குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 2 புத்தகங்களும் கல்விக்கான உயர்ந்த கருத்துகளைக் கொண்டுள்ளன. நமது பண்டைய அறிவியலான யோகாவைப்பற்றி அறிய இது போன்ற புத்தகங்கள் நமக்குத்தேவை. முதல்வர் ஆதித்யநாத்தின் புத்தகம் யோகா பற்றி விளக்குகிறது. அதேபோல்,ராம்தேவின் புத்தகமும் தத்துவ மாணவர் களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும்’ என்றுதெரிவித்துள்ளார்.

;