india

img

மொகரம் ஊர்வலத்திற்கு 2-ஆவது ஆண்டாக உ.பி. பாஜக அரசு தடை.... ஷியா - சன்னி மோதலைக் குறிப்பிட்டும் சர்ச்சை....

லக்னோ:
மொகரம் ஊர்வலத் துக்கு தடை விதித்துள்ள உத்தரப்பிரதேச பாஜக காவல் துறை, அதுதொடர்பான அறிக்கையில், ஷியா, சன்னிமுஸ்லிம்களுக்கு இடையிலான 40 ஆண்டு மோதலை குறிப்பிட்டு சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.இஸ்லாமியக் காலண்டரின் முதல் மாதமாக வருவது மொகரம். இதன் 10-வது நாள்தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில்முஸ்லிம்கள் ‘தாஜியா’ எனும்புனிதப் பதாகைகளை ஏந்திதம் பகுதிகளில் ஊர்வலம் நடத் துவது வழக்கம். 2021-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 10 முதல் முஸ்லிம் களின் மொகரம் மாதம் துவங்குகிறது. இந்த மொகரமிற்காக, ஷியா மற்றும்சன்னி பிரிவுகள் தனித்தனியாக இருவேறு நாட்களில் ஊர்வலத்தை நடத்துவது வழக் கம்.இந்நிலையில், கொரோனாதொற்றுப் பரவலைக் காரணம் காட்டி உத்தரப்பிரதேசத்தில் 2-ஆவது ஆண்டாகமொகரம் ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ள பாஜக அரசின் காவல்துறை, அத்துடன் நிற்காமல் ஷியாக்கள் அதிகம்வாழும் லக்னோ உள்ளிட்டநகரங்களின் மொகரம் ஊர்வலங்களில் கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த மோதல்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் ஷியா, சன்னி ஆகிய இரண்டுமுஸ்லிம் பிரிவினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஆட்சேபத்துக்குரிய வாசகங்களை டிஜிபி குறிப் பிட்டது கண்டனத்துக்கு உரியது. அமைதிச் சூழலைக் கெடுக்கும் வகையிலான அறிக்கையை டிஜிபி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள் ளன.

;