india

img

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காத ஆசிரியர் பணிநீக்கம்... பாஜக ஆளும் உ.பி.யில் அரங்கேறிய அராஜகம்... 

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஜெகதீஷ்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும்சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராகப்பணிபுரிந்து வந்தவர், யஷ்வந்த் பிரதாப் சிங்.இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு ரூ. 1000 நன்கொடை வழங்குமாறு தன்னை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர்வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் தன்னை பணியில் இருந்துபள்ளி நிர்வாகிகள் நீக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறியிருக்கும் அவர், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால்நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.ராமர் கோவிலுக்காக தனக்கு நன்கொடை ரசீது புத்தகம் வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் ரூ. 80 ஆயிரம் வசூலித்துக் கொடுத்திருப்பதாகவும் பிரதாப் சிங் கூறியுள்ளார். இந்நிலையில், பிரதாப்சிங்கின்குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி நிர்வாகிகள், அவர் தானே விரும்பித்தான் 3 நன்கொடை ரசீது புத்தகங்களை பெற்றார் என்றும், ஆனால்வசூலித்த தொகையை வழங்காத காரணத்தால், ஆசிரியர் பணியைதானாகவே ராஜினாமா செய்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

;