india

img

கிருஷ்ணர் குடையாக பிடித்த கோவர்த்தன மலை விற்பனை..? இந்தியாமார்ட் நிறுவன சிஇஓ மீது வழக்கு....

மதுரா:
இந்திரன் ஏவிவிட்ட பெருமழையின்போது, ஆயர்பாடி மக்களையும், பசுக்களையும் காப்பாற்ற, பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகத் தூக்கிப்பிடித்தார் என்பது புராணக் கதையாகும்.

அந்த வகையில், உ.பி. மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்த்தன மலை, புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இந்த மலையில் இப்போதும் கிருஷ்ணர் வாழ்ந்து வருகிறார் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது.இந்நிலையில்தான், இந்த கோவர்த்தன மலையின் கற்களை வெட்டி ஆன்லைனில் விற்றதாக, ‘இந்தியா மார்ட்’ இணையதளத்தின் மீது மதுரா பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்தியா என்பவர், புகார் அளித்திருந்தார். அதில், கோவர்த்தன் மலையின் ஒரு கல்லை, இந்தியாமார்ட் நிறுவனம் 5,175 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், இது போலியான கற்கள் அல்ல! என்று அந்த நிறுவனம் விளம்பரமும் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகாரின் பேரில், ‘இந்தியாமார்ட்’ சிஇஓ தினேஷ் அகர்வால், துணை நிறுவனர் ப்ராஜேஷ் அகர்வால், மதுரா பகுதியைச் சேர்ந்த விற்பனையாளர் அன்கூர்அகர்வால் ஆகியோர் மீது ஐபிசி 265 மற்றும் தகவல்தொழில்நுட்ப பிரிவு 66-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

;