india

img

போலி கொரோனா சான்றிதழ் அளித்த பாஜக எம்எல்ஏ... நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காக மோசடி

லக்னோ:
போலி கொரோனா சான்றிதழ் அளித்து, நீதிமன்றத்தை ஏமாற்றிய பாஜக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மெந்தவால் சட்டப்பேரவை தொகுதி பாஜகஎம்எல்ஏ-வாக இருப்பவர், ராகேஷ் சிங்பாகேல். இவர் மீது, கடந்த 2010-ஆம் கொலை முயற்சி மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கான வழக்கு சாந்த் கபீர் நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளது. ஆனால், இந்த வழக்கிற்காக, கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூட ராகேஷ் சிங் பாகல் நீதிமன்றத்தில்ஆஜரானதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏமாற்றி வந்தார்.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை. இந்தமுறை கொரோனா தொற்றைக் காரணம் காட்டினர். தனக்கு கொரோனாதொற்று உள்ளதாக தனியார் மருத்துவமனை அளித்த சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.ஆனால், பலநாள் திருடன் ஒருநாள்அகப்படுவான் என்பதைப் போல, பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங் பாகேல்சிக்கிக் கொண்டார். கொரோனா இருப்பதாக போலி மருத்துவச் சான்றிழைப் பெற்று பாகேல் தங்களை ஏமாற்றி இருக்கிறார் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பதையும் ‘கொரோனா தனிமை கண்காணிப்புக் குழு’வின் உறுப்பினர் டாக்டர் விவேக்குமார் ஸ்ரீவஸ்தவா அளித்த அறிக்கையின் மூலம் நீதிமன்றம் கண்டுபிடித்து விட்டது.இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு பேரில், பாஜக எம்எல்ஏ ராகேஷ்சிங் பாகேல் மற்றும் டாக்டர் ஹர்கோவிந்த் சிங் ஆகியோர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 419, 420, 467, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் கலீலாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;