india

img

ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு  

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய முகமை தேர்வு மையம் அறிவித்துள்ளது.  

2022 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் (ஏப்ரல் 2) மே 7 ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் திருத்தம் செய்துகொள்ள 5 நாள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.