முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வெளியாகிவிட்டதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 267 நகரங்களில் 849 மையங்களில் கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 301 பேர் நீட் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை https:/natboard.edu.un என்ற இணையதளத்தில் பார்க்கலாம்