india

img

போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் கிடைக்காமல் அவமானப்பட்ட பாஜக.... பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பரிதாபம்

சண்டிகர்:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றாலும், பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மத்தியில் தான் கடுமையான எதிர்ப்பு உள்ளது. அதிலும், குறிப்பாக, ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியையொட்டி, மத்திய பாஜக அரசு அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை, தடியடித் தாக்குதல் பஞ்சாப், ஹரியானா மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இங்குள்ள பாஜகவினரே, தங்களின் அகில இந் திய தலைமை மீது அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர்.

இது பஞ்சாப் மாநில உள் ளாட்சித் தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பதிண்டா மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வேட்பாளர்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட் டுள்ளது.பதிண்டா மாநகராட்சியில் மொத்தம் 50 வார்டுகள் இருக்கும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு கடைசிநாளான பிப்ரவரி 3-ஆம் தேதிவரை பாஜக நிர்வாகிகள் பகீரதபிரயத்தனம் செய்தும், 42 இடங்களுக்கே ஆள் கிடைத்துள்ளனர். 8 இடங்களுக்கு ஆள் நிறுத்த முடியவில்லை. பாஜக வேட்பாளராக போட்டியிட்டால் மக்களின் கோபத்திற்குஆளாக நேரிடும் என பலரும்அஞ்சி ஓடியுள்ளனர்.இதுதவிர பல இடங்களில், பாஜக வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அவர்களின்பிரச்சாரப் போஸ்டர்களையும் மக்களே திரண்டு கிழித்தெறியும் சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இது பாஜக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

;