india

img

ஜார்கண்டில் ரோப் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலி  

ஜார்கண்டில் உள்ள மலை சுற்றுலாத்தலத்தில் ரோப் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.    

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலைப்பகுதியில் சுற்றுலாத்தலம் ஒன்று உள்ளது. நாட்டின் மிக உயரமான ரோப்கார் வழித்தடமான இதில் மொத்தம் 25 ரோப்கார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் இந்த ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 12 ரோப்வே கேபின்களில் 48க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் இரண்டு ரோப்கார்கள் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவ்விபத்து காரணமாக மற்ற ரோப் கார்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை இந்த விபத்திலிருந்து 36 பேரை மீட்டுள்ளதாகவும், மேலும் ரோப் கார்களில் சிக்கி 40 மணிநேரம் தவித்த 15 சுற்றுலாப் பயணிகளில் 10 பேரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களால் மீட்கப்பட்டுள்ளதாக இன்று காலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அதனைதொடர்ந்து இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

;