india

img

மே மாதத்தில் 19 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!  

இந்தியாவில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் முடக்கியுள்ளது.  

இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, விதிகளை மீறும் கணக்குகள் தொடர்பான புகார்கள் மீது வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த மே மாதத்தில் 19 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மே 1 ஆம் தேதி முதல் மே 31 வரையிலான காலத்திய அறிக்கையில், தடை விதிக்கப்பட்டுள்ள 19.10 லட்சம் கணக்குகளில் பெரும்பாலான கணக்குகள் வாட்ஸ்அப்பின் மேம்பட்ட மெஷின் லெர்னிங் சிஸ்டம் மூலம் கொள்கை விதிகளை மீறியது கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அதை தவிர 24 கணக்குகளின் மீது பயனர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளது.  

கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளும், மார்ச் மாதம் சுமார் 18 லட்சம் கணக்குகளும், பிப்ரவரியில் 14.26 லட்சம் கணக்குகளும், ஜனவரியில் 18.58 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் முடக்கியுள்ளது. 

;