india

img

ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியா, பாஜக-வின் மூத்த தலைவரா? உ.பி. சுற்றுப் பயணம் குறித்து சமாஜ்வாதி கேள்வி....

லக்னோ:
குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-தின் சுற்றுப் பயணம், ஒரு பாஜக மூத்த தலைவரின் சுற்றுப் பயணம் போல உள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே விமர்சித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஆகஸ்ட் 26 துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு உ.பி. மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள் கிறார். லக்னோவில் வியாழனன்று அம்பேத்கர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், தனது பயணத்தின்போது, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் சில திட்டங்களையும், துளசி ஸ்மராக் பவன் மற்றும் நகர் பேருந்து நிலையத்தின் கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையிலேயே, குடியரசுத் தலைவரின் வருகையை, பாஜக மூத்த தலைவரின் வருகையைப் போல உ.பி. பாஜக அரசு பயன்படுத்திக் கொள்வதாக அயோத்தி யைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே விமர்சித்துள்ளார். “இது இந்தியக் குடிரசுத் தலைவரின் வருகை அல்ல, பாஜக-வின்பெரிய தலைவரின் வருகை போல் உள்ளது என்று சொல்வதில் எனக்குஎந்த தயக்கமும் இல்லை; உ.பி.யில் நடைபெறவுள்ள 2022 தேர்தலுக்காக குடியரசுத் தலைவரின் வருகையை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. இதுகுடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்திற்குஎதிரானது. அரசியலமைப்பு பதவியின் மரியாதைக்கு எதிரானது. இதனை சமாஜ்வாதி கட்சி கண்டிக் கிறது” என்று பவன் பாண்டே கூறியுள்ளார்.பவன் பாண்டேவின் குற்றச்சாட்டுகளுக்கு, அயோத்தி பாஜக எம்.பி லல்லு சிங் பதிலளித்துள்ளார். “தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குடியரசுத் தலைவர் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய அவருக்கு உரிமை உண்டு. இதை அறிந்தே அவரும் வெளியே வந்துள்ளார். குடியரசுத் தலைவர் கிராமம் கிராமமாக, மாவட்டம் மாவட்டமாக அலைவது நல்ல விஷயம்” என்று லல்லு சிங் குறிப்பிட்டுள்ளார்.