india

img

லக்கிம்பூர் வன்முறை விவகாரம் : ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு சம்மன்...

லக்னோ 
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஒன்றிய பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நிகழ்த்திய  வன்முறையில்  4 விவசாயிகள், பத்திரிகையாளர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தானாக விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரபிரதேச பாஜக அரசு மீது கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தது.

இந்நிலையில், வன்முறை விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுடைய ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆஷிஷ் மிஸ்ராவை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.