india

img

நாளை நடைபெறுகிறது துணை ஜனாதிபதி தேர்தல்!

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறகிறது. இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோதே, கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (செப்.9) நடைபெறகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் “இந்தியாகூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மக்களவையில், 542 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 240 உறுப்பினர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் 394 வாக்குகள் பெற வேண்டும்.

இந்த சூழலில், இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில், பிஜு ஜனதா தளம் கட்சி மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி, துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.