பதவிக்காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளார்
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கெட்கர் போலி சான்று மற்றும் போலியான விவரங்கள் அளித்து தேர்வு எழுதியது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில் இவரது ராஜினாமா தற்போது பேசுபொருளாகியுள்ளது.