ஒடிசா மாநில சட்டமன்றத்தில் தற் போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் உருளைக்கிழங்கு விலை உயர்வு தொடர் பாக எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் அம ளியில் ஈடுபட்டன.
உருளைக் கிழங்கு விலை உயர்வுக்கு ஒடிசாவில் உள்ள மோகன் சரண் மாஜி அரசு பொ றுப்பேற்க வேண்டும் என்றும், விலை யைக் கட்டுப்படுத்த உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட மன்றத்தில் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
300 லாரிகள் எங்கே?
உருளைக்கிழங்கு விலை உயர்வு தொடர்பாக பிஜு ஜனதா தள எம்எல்ஏ கணேஷ்வர் பெகரா சட்டமன்றத்தில் பேசுகையில்,“பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தால் நுகர்வோ ருக்கு உருளைக்கிழங்கு போதுமான அளவு வழங்கப்படுவதை ஏன் உறுதிப் படுத்த முடியவில்லை? உருளைக் கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்த, உத்தரப்பிரதேசத்தில் இருந்து 300 லாரி களில் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா கூறியிருந்தார். ஆனால் அந்த 300 லாரி கள் எங்கே வந்தன? 300 லாரிகளில் வந்த உருளைக்கிழங்குகளை அரசு யாரிடம் கொடுத்தது? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
அரசு அதிகாரிகளிடம் கேட்டால் உரு ளைக்கிழங்குகளை கொண்டு வந்த 300 லாரிகளை காணவில்லை என்று கூறு கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒடிசாவிற்கு 300 லாரிகளில் உருளைக் கிழங்குகள் வந்த சம்பவம் பெரும் புதிராகவே உள்ளது. ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு நுகர்வோர் சுரண் டப்படுகிறார்கள். அரசாங்கம் முற்றி லும் தோல்வியடைந்துள்ளது. உருளைக் கிழங்கு ஏழைகளின் உணவு. விலை உயர்வு அவர்களை மிகவும் பாதித்துள் ளது” என அவர் கூறினார்.
ஒடிசாவில் 300 லாரிகளில் வந்த உரு ளைக்கிழங்குகளை காணவில்லை எனக் கூறப்படும் சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.