கொல்கத்தா விழாவில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்
கொல்கத்தா, அக்.18- மௌலானா ஹஸ்ரத் மொஹானி யால் உருவாக்கப்பட்டு, பகத்சிங் மூல மாக அழியாப் புகழ்பெற்ற இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் மட்டுமே எதிர்கால இந்தியாவின் முழக்கமாகும் என்று கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு தொடக்கவிழாக் கொண்டாட்டத்தில் தலைவர்கள் முழங்கினர். கொல்கத்தாவின் இதயமாக விளங்கும், நேதாஜி இண்டோர் ஸ்டேடி யத்தில் 25 ஆயிரத்திற்கும் மேலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்புடன் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா மிகவும் எழுச்சியுடன் வியாழ னன்று துவங்கியது. விழாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிமன் பாசு தலைமை வகித்தார்.
விழாவில் பங்கேற்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: இன்றைய தினம் ஒட்டுமொத்த நாடும் ஒரு போலீஸ் ராஜ்ஜிய அரசாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய மோடி அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் என்றும், மற்ற வர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்றும் ஆட்சியாளர்களால் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களின் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளைக்கிணங்க ஒரு வெறிபிடித்த இந்து ராஷ்ட்டிரமாக மாற்றுவதற்குத் தேவையான பாசிஸ்ட் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தாஷ்கண்டில் நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாகிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை, அது தொடங்கிய காலத்திலிருந்தே அழித்து ஒழித்திட, ஏகாதிபத்திய சக்திகள் முயற்சி களை மேற்கொண்டன. எனினும் அவற்றையெல்லாம் முறியடித்துத்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் நாடு முழு வதும் மிகப்பெரிய அளவில் வளர்ந்தி ருக்கிறது. இந்துத்துவா வெறியர்கள், தங்களுடைய இந்துத்துவா வெறியை எதிர்க்கக்கூடிய வல்லமை கம்யூனி ஸ்ட்டுகளுக்கு உண்டு என்பதை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். நம்மைக் கண்டுதான் இன்றைக்கும் அவர்கள் பயப்படுகிறார்கள்.
காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராக இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமேதான். பயங்கரவாதம் கோலோச்சுகின்ற ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் தொகுதியிலிருந்து நமது தோழர் யூசுப் தாரிகாமி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். இப்போது அவரை ஆட்சி யாளர்கள் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள். செங்கொடி இயக்கம் ஒன்றுதான் இந்த அமைப்பை மாற்றக்கூடிய இயக்கம் என்ற காரணத்தினால்தான் வலதுசாரி முகாம் நம்மைக் கண்டு அஞ்சுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தகர்த்துள்ள நடவடிக்கை வரை யிலும் இவ்வாறு நாட்டைப் பிளவுபடுத்தி தங்கள் குறிக்கோளை அடைந்திட ஆட்சி யாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
சூர்யகாந்த் மிஸ்ரா
மேற்கு வங்க மாநிலச் செயலா ளர் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா பேசு கையில் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியைத் தொகுத்துக் கூறினார். சுவாமி விவேகானந்தர் கூட சோசலிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டார். சோவியத் யூனியனில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் வெற்றி தான் நம் நாட்டிலும் கம்யூனிஸ்ட்டு களால் பூரண சுயராஜ்யம் என்னும் கோரிக்கை எழுப்பப்பட்டது என்றார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிமன்பாசு பேசுகையில், நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றுதான் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல் படக்கூடிய ஒரே இயக்கமாகும் என்றும், எண்ணற்ற தியாகிகளையும், விடு தலைப் போராட்ட வீரர்களையும், வீராங் கனைகளையும் கொண்டுள்ள இயக்கமு மாகும் என்றும் பெருமிதத்துடன் கூறினார். இப்படிப்பட்ட வீரஞ்செறிந்த நம் நாட்டை, காவிமயப்படுத்திட முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அவர்களின் கனவுகள் தொழி லாளர் வர்க்கத்தாலும், உழைக்கும் மக்களாலும் விரைவில் அடித்து வீழ்த்தப்படும் என்றும் பிமன்பாசு சூளுரைத்தார்.