“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு வீரவணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்தி லும் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டி ருந்த வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரிய தாக அமைந்திருக்கிறது. அவர் சென்னையிலே படித்தவர். பலநேரங்களில் நம்முடன் தமிழில் உரையா டியவர். கொள்கைப் பயணத்திலே ஒன்றாகப் பய ணித்தவர். அப்படிப்பட்ட ஓர் அரிய மாவீரர் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் சொல்லுவார். அப்படிப்பட்ட உணர்வுகள். அதுவும் ஜன நாயகம் முட்டுச்சந்திலே மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்திலே, அதை எதிர்த்துப் போர்த் தளபதிகளில் ஒருவராக போர்க்களத்திலே களமாடி னார். அப்படிப்பட்ட ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு! என்றாலும் எதிர்கொள்வோம்.
அவர்கள் நினைத்த ஒரு புதிய பொதுவுடமை, சம தர்மச் சமுதாயத்தைப் படைக்க நாம் ஒன்றுபட்டுப் பாடுபட்டு வென்று காட்டுவோம். அதுதான் அவருக்கு நாம் சூட்டுகின்ற காணிக்கை மாலையாகும்.
அவருடைய பிரிவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கைக் குடும்பமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அருமைத் தோழர் களுக்கும் திராவிடர் கழகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு நம் வீர வணக்கம்! வீரவணக்கம்!!” என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தமது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.