கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டில்லியில் கடந்த சில நாள்களாகத் தொற்று உறுதியாகும் விகிதம் 0.5 சதவீதமாக உள்ளதாகவும், எனவே டெல்லியில் முதல்கட்டமாக மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விரையில் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.