india

img

தில்லியில் மோசமான காற்றின் தரம் - ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில், மக்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மாசு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கூற்றுப்படி, தலைநகர் டெல்லியில் இன்று காலை 7:30 மணி வரை, சராசரி காற்றின் தரக் குறியீடு 328 ஆக இருந்ததாகவும், பெரும்பாலான பகுதிகளில், காற்றின் தரக் குறியீடு அளவு 300 முதல் 400 வரை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தில்லியின் ஏழு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அளவு 200 முதல் 300 வரை பதிவாகியுள்ளது. நேற்று (27.10.24) காலை 7:30 மணி வரை சராசரி காற்றின் தரக் குறியீடு 352 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.