india

img

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கைவ
சம் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அரசுக்கும் தீவிர
வாதிக்குமான தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரைக் கைப்பற்றத் திட்ட
மிட்டுள்ளதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்தியப் புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியானது. இதைய
டுத்து பிரேதப் பரிசோதனையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது.     

இந்த சுழலில்  ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு  இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறுபவர்
களுக்கு வசதியாகச் சிறப்பு விமான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.