india

img

விண்வெளி போருக்கான ஒத்திகையை நடத்த இந்திய ராணுவம் திட்டம்

விண்வெளி போருக்கான ஒத்திகையை, வரும் ஜூலை மாதம் இறுதியில் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் ஏ-சாட் ஏவுகணை, 300கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோளை, 3 நிமிடத்தில் சுட்டு வீழ்த்தியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி போர் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இடம்பிடித்தது. 

இதை தொடர்ந்து, தற்போது விண்வெளி போருக்கான ஒத்திகையை நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒத்திகை வரும் ஜூலை மாதம் இறுதியில் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.