புதுதில்லி, டிச. 23 - நாடு முழுவதுமுள்ள விவசாயிகள், தீர்க்கப்படாத தங்களின் நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து திங்க ளன்று (டிசம்பர் 23) மாவட்ட ஆட்சி யரகங்களில் குவிந்தனர்
சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒருங்கி ணைத்திருந்த இந்த இயக்கத்தில் விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி யர்கள் வாயிலாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மனு அளிக்கப் பட்டது.
ஜக்ஜித் சிங் தல்லேவால் உயிரைக் காப்பாற்றுங்கள்\
விவசாயிகளின் நீண்டகால கோரிக் கைகளை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருப் பதுடன், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி கள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லே வால் உயிரைக் காப்பாற்றுவது அவ சியம் என விவசாயிகள் அமைப்புகள் தங்களின் மனுவில் வலியுறுத்தி யுள்ளன.
பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்
“தில்லியை நோக்கிப் பேரணி யாகச் செல்லும் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை, இரப்பர் குண்டுகள், நீர்த்தாரை தாக்குதல்களை நடத்தி வருகிறது. நொய்டா - கிரேட்டர் நொய்டாவில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்திய 112 விவ சாயிகள் கடந்த 21 நாட்களாக லக்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கவுதம புத்தா நகரில் பதிவு செய்யப் பட்ட முதல் தகவலறிக்கை (FIR) எண் 0538-ன் படி, காவல் துணை ஆய்வா ளர் ராஜீவ் குமாரை கொலை செய்ய முயன்றதாகவும், மெட்ரோ ரயிலை நிறுத்த முயன்றதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைமுகமாக மீண்டும் 3 வேளாண் சட்டங்கள்
ஒன்றிய அரசின் புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கை, ஏற் கெனவே ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக உள்ளது. ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் உணவு மானியத்தை ரூ. 60 ஆயிரத்து 470 கோடியும், உர மானியத்தை ரூ. 62 ஆயிரத்து 445 கோடியும் குறைத்துள்ளது. பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் விளை பொருள் சந்தைக் குழுவின் (APMC) மூலம் விவசாயிகளிடம் மேற்கொள்ளப் படும் கொள்முதலைக் குறைத்து, உணவு மானியத்துக்குப் பதிலாக நேரடி பணப்பரிமாற்றத்தை ஊக்கு வித்து, இந்திய உணவுக் கழகம் (FCI) என்ற அமைப்பையே சீரழிக்க முயல்கிறது.
மின்சாரம் தனியார்மயம் கூடாது
குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, மின்சாரத் தனியார் மயம் எதிர்ப்பு, நில உரிமைச் சட்டம் 2013 அமலாக்கம் போன்ற தங்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. விவசாயிகளு டன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. பெருநிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுகிறது” என்று தங்களின் மனுக்களில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்!
“விவசாயிகள் அமைப்புகளுடன் ஒன்றிய அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், விவ சாயத் தலைவர் தல்லேவாலின் உயி ரைக் காக்க வேண்டும், சிறையில் உள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும், தேசிய வேளாண் சந்தைக் கொள்கை யை திரும்பப் பெற வேண்டும், 2021 டிசம்பர் 9 அன்றைய கடிதத்தில் ஒப்புக் கொண்ட அனைத்து கோரிக்கைகளை யும் ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்; இவற்றின் மீது குடியரசுத் தலைவர் உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்” என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.