‘சாம்சங்’ தொழிலாளர்க்கு ஆதரவான சென்னை ஆர்ப்பாட்டத்தின் போராட்டத்தின்போது, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் குறிப்பிட்ட தாவது:
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட் டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவில் தொழில் தொடங்கும் முதலாளிகள், நாட்டின் சட்டங்களை, தொழிலாளர் சட்டங்களை மதிக்க மறுக்கின்றனர். சட்டங்களைப் பின்பற்றுமாறு சாம்சங் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்த தொழிலாளர் துறையோ, தமிழக அரசோ தயாராக இல்லை. மாறாக, சட்டத்திற்கு உட்பட்டு போராடுகிற தொழிலாளர்களை யும், இடதுசாரிகளையும் ஒடுக்க நினைப்பது ஆரோக்கி யமானதல்ல. இது கண்டனத்திற்குரியது. ஆக்கப்பூர்வ அரசியலுக்கு வழிவகுக்காது. தமிழக அரசு இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சங்கத்தை பதிவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களில் அரசின் அணுகுமுறை தவறாக உள்ளது. சாம்சங் ஆலையில் அனைத்து தொழிலாளர்களும் சேர்ந்து போராடுகின்றனர். நாங்கள் அங்கு சென்று அரசியல்சாயம் பூச விரும்ப வில்லை. தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிட்டு அரசு தீர்வு காண்கிறது. சாம்சங் நிறுவன பிரச்சனையில் அணுகுமுறை மாறியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மாநில அரசுகளை தங்களின் கைப்பாவை யாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கு தமிழக அரசு துணைப் போகக்கூடாது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
முதல்வர் அறிவுறுத்தல் பேரில் அமைச்சர்கள் ஆலோசனை!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம், ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர்கள், தங்களின் தொழிற்சங்க உரிமைக்காக 25 நாட்களாக போராடி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே 5 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காணுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் அமைச் சர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.
அதனடிப்படையில், வருகிற திங்கட்கிழமை (அக்.7) அன்று அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது.
காஷ்மீர், ஹரியானாவில் பாஜக தோற்கிறது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்
சண்டிகர், அக் 5- ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப் டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதி களில் 3 கட்டங்களாகவும், ஹரியானா சட்டப் பேரவைக்கு அக்டோபர் 5 அன்று ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், ஹரியானாவில் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
இரண்டு மாநிலத் தேர்தல்களும் நடை பெற்று முடிந்துள்ள நிலையில், அக்டோபர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, ஹரியானாவில் மொத்த முள்ள 90 தொகுதிகளில் 55-இலிருந்து 64 தொகுதிகள் வரை பெற்று காங்கிரஸ் ஆட்சி யமைக்கும், பாஜகவுக்கு 22 முதல் 32 இடங் கள் வரையே கிடைக்கும் என்று தேர்த லுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதேபோல ஜம்மு - காஷ்மீரி லும், 90 இடங்களில் 49 முதல் 61 இடங்கள் வரை காங்கிரஸ் அணிக்கு கிடைக்கும்; பாஜக அணிக்கு 20 முதல் 32 இடங்களும், பிடிபி கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் மீது 12 முறை ஏவுகணை தாக்குதல் அமெரிக்க - இங்கிலாந்து ராணுவம் அட்டூழியம்!
சனா, அக்.5- ஏமன் தலைநகர் சனா மீது அமெரிக்க - இங்கிலாந்து கூட்டுப்படை 12 முறை ஏவு கணை தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நக ரங்கள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி யது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க - இங்கிலாந்து கூட்டுப்படை இந்த தாக்கு தலை நடத்தியுள்ளது. காசாவில் பாலஸ் தீனர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்ய தொடங்கிய பிறகு, ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு வணிக கப்பல் கள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியது.
இதனால் இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணைந்து கூட்டுக் கடற்படையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.