புதுதில்லி,நவம்பர்.04- டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப், ஸ்கைப் கணக்குகள் மற்றும் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடி குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள், 17,000 ஸ்கைப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை 6.69 லட்சம் சிம் கார்டுகளும் 1.32 லட்சம் ஐஎம்இஐ முகவரிகளும் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் தகவல்
'குடிமக்கள் நிதி இணையவழி மோசடிப் புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு மூலம் இதுவரை 9.94 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையவழி மோசடி புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.