தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது.
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளையும், கல்லூரி அளவிலான அலுவலகங்களுக்கான பிரதிநிதிகளையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மற்றும் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், 52 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.8 லட்சம் மாணவர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP), காங்கிரஸின் மாணவர் அமைப்பு இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) மற்றும் இடதுசாரி மாணவர் குழுக்களால் ஆதரிக்கப்படும் SFI-AISA கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். SFI-AISA கூட்டணி சார்பில், அஞ்சலி, சோகன், அபிநந்தனா, அபிஷேக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.