மனித நேயத்திற்கு சாவுமணி
இஸ்ரேல், காசாவில் ‘இன அழிப்புச் செயல் களில்’ ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு இன மக்களைக் கொல்வது, கடுமையான உடல் மற்றும் மனக் காயங்களை ஏற்படுத்துவது, வாழும் நிலைமைக ளை வேண்டுமென்றே அழித்து பஞ்சம் ஏற் படுத்துவது, பிறப்பைக் கூடத் தடுக்கும் நடவ டிக்கைகள் உள்ளிட்ட கொடூரங்கள் அரங்கேற் றப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஐ.நா.வின் 1948 ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட அழிப்புச் செயல்கள். ஐ.நா.விசாரணை ஆணை யத்தின் தலைவர் நவிபிள்ளை “காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை அழிக்கும் நோக்கம் தெளிவாக உள்ளது” என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; இது ஒரு திட்டமிடப்பட்ட அழிப்பு!
ஒரு காலத்தில் வீடுகளாக இருந்தவை இன்று இடிபாடுகளின் குவியல்களாக மாறிவிட்டன. இஸ்ரேல் இராணுவம் இதுவரை காசாவில் 64,905-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை கொன்று குவித்திருக்கிறது. 90 சதவிகித வீடுகள் அழிக்கப் பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள் என எதுவும் மிஞ்ச வில்லை. காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் மக்கள் தினமும் குண்டுவீச்சு, உணவுப் பற்றாக் குறை, தண்ணீர் இல்லாமல் மரணத்தின் நிழலில் வாழ்கிறார்கள். இது எப்படி ஒரு ‘தற்காப்பு நட வடிக்கை’யாக இருக்க முடியும்? இது ஒடுக்கு முறையின் உச்சம்!
இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை தொடர்ந்து மீறுகிறது. 28 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மா னங்களை மீறியது, நான்காவது ஜெனீவா ஒப் பந்தத்தை மீறியது, மேற்குக் கரையில் சட்டவிரோ தக் குடியேற்றங்களை அமைத்தது - இவை அனைத்தும் சர்வதேச விதிகளை இஸ்ரேல் மதிக்க வில்லை என்பதற்கான சான்றுகள். இப்போது, “முழு காசாவையும் ஆக்கிரமிப்போம்” என்று பிரத மர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருப்பது, இந்த ஆக்கிரமிப்பின் உச்சகட்டம்.
இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெஸலேல் ஸ்மோட்ரிச் காசாவை “முற்றிலுமாக அழிக்க வேண்டும்” என்றும், பாலஸ்தீனர்களை “முழு மையான விரக்திக்கு” ஆளாக்கி வெளியேறும்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது, அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஒரு இன வெறி மனப்பான்மையின் வெளிப்பாடு. இவ்வள விற்குப் பின்பும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயு தங்களை வழங்கி இனஅழிப்பை நேரடியாக ஆத ரிக்கிறது. அதோடு, ஐ.நாவில் தனக்கிருக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலை பாதுகாக்கிறது.
ஐ.நா.வின் வலுவான அறிக்கை, சர்வதேச சமூகத்திற்கு ஒரு அறைகூவல் விடுத்துள்ளது. இப்போது நடவடிக்கை எடுக்கத் தவறினால், வர லாறு நம்மை மன்னிக்காது. இஸ்ரேலின் இந்த அட்டூழியத்தை மௌனமாகப் பார்த்துக்கொண்டி ருப்பது, நாமும் அதற்கு உடந்தையாக இருக்கி றோம் என்று அர்த்தம். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருந்தால், அது காசாவின் அழுகுரலுக்கு உலகநாடுகள் செவிசாய்க்க வேண்டும்.