வாய்ப்பு! சென்னை, டிச. 5 - தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7 முதல் 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 11-இல் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமி ழகத்தில் ஒரு சில இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன்பதவியேற்றார்
புதுதில்லி, டிச. 5 - தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோக னின் பெயரை உச்ச நீதி மன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நீதிபதி மன்மோகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வியாழனன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிர மாணம் செய்துவைத்தார்.
1962 டிசம்பர் 17 அன்று தில்லியில் பிறந்தவரான மன் மோகன், தில்லி பல்கலைக் கழகத்தின் இந்து கல்லூ ரியில் வரலாறு மற்றும் தில்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் சட்டம் பயின்ற வர் ஆவார். சிவில், குற்ற வியல், அரசியலமைப்பு, வரி விதிப்பு, நடுவர், சேவை வழக்குகளில் உச்ச நீதி மன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி யுள்ளார்.