ஜம்மு-காஷ்மீரின் குல்காம் சட்டமன்ற தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் யூசூப் தாரிகாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செல்லும் இடமெல்லாம் யூசூப் தாரிகாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் சட்டமன்ற தொகுதிக்கு முதல் கட்டத்திலேயே (செப்., 18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.