india

img

ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா

புதுதில்லி, ஏப்.25- இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. தற்போதுவரை 24,506 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.குஜராத்தில் 2,815 பேர் பாதிக்  கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குஜ ராத் மாநிலத்தில் பரோடாவில், பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்கள் உட்பட 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா எப்படிப் பரவியது என்பது தொடர்பாக நடந்த விசாரணையில், மூவரும் வியா ழக்கிழமை ஏ.டி.எம்மில் பணம் எடுத்துள்ள னர் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த ஏ.டி.எம் சீலிடப் பட்டு தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. அந்த ஏ.டிஎம்-யை பயன்படுத்திய அனைவரை யும், தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோல், ஜம்மு - காஷ்மீரில் 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் 31 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் குப்வாராவில் உள்ள பட்டாலியனில் நர்சிங் உதவியாள ராகப் பணிபுரிந்து வந்த  ஒரு ராணுவ வீர ருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இவர், தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.